• English
  • ‍සිං‍හ‍‍ල
  • தமிழ்

எம்மை பற்றி

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.

. கூட்டுத்தாபனத்தின் பிரதான குறிக்கோள்கள் பின்வருமாறு:

“பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், விற்பனையாளர் மற்றும் விநியோகத்தர் ஒருவராக தொழில் நடத்துதல்.

பெற்றோலியத்தினை அகழ்தல், உற்பத்தி செய்தல் மற்றும் சுத்திகரித்தல் போன்றவற்றுக்கான கண்டறிதல் ஆய்வுத் தொழிற்பாட்டினை நடாத்துதல் அத்துடன் குறிக்கோள்களை அடையும் பொருட்டு இடைநேர்விளைவான அல்லது ஆக்கபூர்மான ஏதேனும் அத்தகைய தொழிற்பாட்டினை நடாத்துதல்”.

எமது நோக்கு

தேசத்தின் சுபீட்சத்திற்கு பங்களிப்புச் செய்து பிராந்தியத்தில் பெற்றோலியம் மற்றும் அதனோடிணைந்த கைத்தொழிலில் வாடிக்கையாளர் விரும்பத்தகு, நம்பகத்தகு, சூழல் நட்புமிகு தொழில் முயற்சியில் முதன்மை பெற்று விளங்குதல்

எமது பணி

ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சூழல் பற்றிய மிகுந்த கரிசனையுடனும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதுடனும் கூடிய அனைத்து செயற்பாடுகளிலும் தொழிலாளர் பங்களிப்பினை ஈடுபடுத்தல், புதுமை படைத்தல் மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களை பேணுதல் என்பவை ஊடாக தொழில் முயற்சியின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகின்ற அதேவேளை விசுவாசமும் வினைத்திறனுமிக்க விநியோகத்தர் வலைப்பின்னலொன்றினூடாக வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்களையும் விஞ்சுகின்ற அனைத்து தீர்வவுகளையும் சேவைகளையயும் வழங்குவதனூடாக உயர்தரமிக்க பெற்றோலிய சுத்திகரிப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளில் தலைசிறந்த தரத்தினை அடையப் பெறல்.

வரலாறு
வருடம் விவரணம்
1962 நாட்டில் இக்காலப் பகுதியில் தொழிற்பட்ட வேறு எரிபொருள் கம்பனிகளுக்கு போட்டியாக கூட்டுத்தாபனம் வியாபாரத்தினை ஆரம்பித்தது.
1964 நாட்டில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் அனைத்து வர்த்தகத்தினையும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்றது. தேசிய மயமாக்கத்திற்கு முன்னர் மூன்று வேறுபட்ட எரிபொருள் கம்பனிகளின் கீழ் இயங்கிய கொலொன்னாவ எரிபொருள் நிலையம், பிராந்திய மொத்த சாலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் என்பன பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டதுடன் ஒரு நிறுவனமாக அதன் தொழிற்பாடுகளை செயலாற்றுவதற்கு அவற்றுன் வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. அப்போதிருந்து, புதிய மொத்தச் சாலைகளும், சில்லறை விற்பனை நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டதுடன், கொலொண்ணாவை எரிபொருள் நிலையத்தினதும் பிராந்திய சாலைகளினதும் களஞ்சியக் கொள்வனவு அதிகரிக்கப்பட்டது.  புதிய தீயணைப்பு குழாய் முறைமையொன்றின் அறிமுகத்துடன் கொலொன்னாவை எரிபொருள் நிலையத்தில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொன்று தாபிக்கப்பட்டதுடன், தொழிறடபாட்டு மற்றும் பராமரிப்புச் சேவைகளை வசதிப்படுத்துவதற்கு உள்ளக வீதி வலையமைப்பும் மேம்படுத்தப்பட்டது.

90களின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரியளவு கொள்ளளவுடைய பவுசர்களை நிரப்புவதற்கு ஏற்றவாறு தாங்கு சட்டக கிறேன் மூலம் நிரப்பும் வசதி மேம்படுத்தப்பட்டது.

1968 கிரமமான வழங்கலினை உறுதி செய்வதற்கும், அந்நிய செலாவணியை மீதப்படுத்தவதுற்கும் ரூபா 175 மில்லியன் செலவில் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 38,000 பீப்பாய் கொள்ளவுடைய எண்ணெய் எண்ணெய் சுத்திகரிப்புச் சாலையினை கூட்டுத்தாபனம் நிர்மாணித்தது.
1969 எண்ணெய் சுத்திகரிப்புச் சாலை இயங்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து 1979 இல் மசகெண்ணெய் வடிசாலை கொள்ளளவை அதிகரித்ததன் ஊடாக, சுத்திகரிப்புக் கொள்ளளவு நாளொன்றுக்கு 50,000 பீப்பாய்களை அதிகரிக்கப்பட்டது. கொலொன்னாவை எரிபொருள் நிலையத்தில் உராய்வு நீக்கி எண்ணெய் கலக்கும் பொறித் தொகுதி நிறுவியமை இதே ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றுமொரு முக்கிய கருத்திட்டமாகும். போட்டி மிக்க விலைகளில், விவசாய இரசாயனங்களை சந்தைப்படுத்தும் நோக்கில் தனியார் துறைக்கு போட்டியாக கூட்டுத்தாபனம் விவசாய நிலைகளை இரசாயன வர்த்தகத்தில் கால்பதித்தது.  
1971 இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலதிக திருத்தத்தின் மூலம் கப்பல் எரிபொருள் வழங்கல் தொழிற்பாடுகளும், எரிபொருள் வழங்கல் செயற்பாடுகளும் கூட்டுத்தாபனத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டன.
1978 புடவைகள், டயர்கள் மற்றும் முடிவாக்கல் கைத்தொழில் போன்றவற்றுக்காக,  நைலோன் 6 நூல் தயாரிப்பதற்காக கூட்டுத்தாபனம் ரூபா. 603 மில்லியன் செலவில் தொழிற்சாலையொன்றைத் தயாரித்தது.
1987 மசகு எண்ணெய் மீதான, கப்பற் கூலியினைக் குறைக்கும் பொருட்டும் கொழும்புத் துறைமுக அபிவிருத்தியினை நிறைவு செய்யும் பொருட்டும், கொழும்புத் துறைமுகத்தின் கரைக்கப்பால் 9.2 கி.மீ தூரத்தில் தனி நிலை நங்கூர மிதவை வசதி உருவாக்கப்பட்டது. இக்கருத்திட்டம், ரூபா 1,764 மில்லியன் மொத்த செலவில் ஒருகொடவத்தை இடைநிலை மசகு எண்ணெய் களஞ்சிய தாங்கிப் பண்ணையொன்றுடன் சேர்த்து 1987 இல் பொருத்தப்பட்டது.

 

1992 சுத்திகரிப்புச் சாலையினை நவீனப்படுத்துவதற்கும், அதன் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் ரூபா. 250 மில்லியன் செலவில் 1992 இல் மசகு வடிசாலை அலகொன்றினை மறுசீரமைப்பதன் ஊடாக, கூட்டுத்தாபனம் மேலும் நடவடிக்கை எடுத்தது.

Our Partners