இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெற்கோ விமானத்துறை பிரிவு இலங்கை விமான எரிபொருள் வழங்கலில் தனியுரிமை பெற்றுள்ளதுடன் கட்டுநாயக்கா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், (IATA:CMB, ICAO: VCBI) மற்றும் தெற்கின் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் (IATA: HRI, ICAO: VCRI) 24 மணி நேரமும் விமான எரிபொருள் வழங்கல் சேவையினை வழங்குகின்றது. தூய உலர்ந்த விமான எரிபொருள் உரிய விமானங்களுக்கு நவீன உற்பத்தி விபரங்களுக்கிணங்க சரியான நேரத்தில் சிக்கனமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் சூழல் நட்புமிக்கவாறும் விமான எரிபொருள் வழங்குதல் சிபெற்கோ விமானத்துறை பிரிவின் பிரதான குறிக்கோளாகும்.
உள்நாட்டு விமானங்கள், நிறுவன மற்றும் நிறைவேற்று முகாமை ஜெட் விமானங்கள் சில பெயர் குறிக்கப்பட்ட வான்படை விமானங்கள் போன்றவற்றுக்கு கொழும்பு விமான நிலையம், ரத்மலான (IATA: RML, ICAO: VCCE) நிலையங்களில் எரிபொருள் வழங்கும் சேவை வழங்கப்படுவதுடன் இது பகல் தொழிற்பாடொன்றாகும். விமான எரிபொருளின் தூய்மையும், அசுத்தமடையாமையும் விமான இயந்திரங்களின் ஆயுள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பு அத்துடன் பராமரிப்புச் செலவு என்பவற்றுடன் நேரடியான தாக்கத்தினை கொண்டுள்மையினால் இது மிக முக்கியத்துவமிக்க விடயமொன்றாகும். எனவே, விமான எரிபொருள் கையாளுவதில் தரக்கட்டுப்பாடும் பராமரிப்பும் மிக முக்கியத்துவமிக்க விடயங்களாகும். AFQRJOS இணைந்து தொழிற்படுத்தப்படும் முறைமைகளுக்கான விமான எரிபொருள் தரத் தேவைப்பாடுகளின் கீழ் நவீன உற்பத்தி விபரங்களின் சரிபார்த்தல் பட்டியலுக்கு அமைய சிபெற்கோ சுத்திகரிப்புச் சாலையில் விமான எரிபொருள் தயாரிக்கப்படுகின்றது. எதிர்வு கூறப்பட்ட கேள்விக்கிணங்க பற்றாக்குறையானது பிற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றது. தற்போது நாளொன்றுக்கு 1.3 மில் லீற்றர்களுக்கான கேள்வி காணப்படுகின்றது.
எமது இலக்கு
பிராந்தியத்தில் சிறந்த சேவையினை நோக்காகக் கொண்ட வாடிக்கையாளர் மற்றும் சூழல் நட்புமிக்க நவீன பெற்றோலியத்தினை அடிப்படையாக கொண்ட விமான எரிபொருள் வழங்குநராக திகழ்தல்.
PAYMENT SCHEMES
Contract Customers – Contract arrangements Through Commercial Manager – Ceypetco
Credit Card Accepting Facility – International Credit Cards (** Backup option to avoid unavoidable circumstances is required.(Hard Cash / third party fuelling nomination and call/communicate with CPC ops hotline/email in advance to avoid last minute repercussions)
Others – Cash (USD), Air BP cards, UV air Tel: +94 11 2253039, Mob: +94 77 1066764 Fax: +94 11 2252331
எரிபொருள்
எரிபொருள் ஜெட் ஏ-1 மற்றும் ஏ.வி.கேஸ் என்பன மூன்று அமைவிடங்களிலும் கிடைக்கப் பெறுவதுடன் பின்வரும் உற்பத்தி விபரங்களுக்கு இணங்க வழங்கப்படுகின்றது.
ஜெட் ஏ- 1
Aviation Fuel Quality Requirements for Jointly Operated System (AFQRJOS) latest issue which embodies the requirements of the following two specifications a. British ministry of defense standard DEF STAN 91-91 latest issue for Turbine Fuel, Kerosene Type, Jet A-1, NATO Code F-35 , Joint Service Designation AVTUR b. ASTM Standard Specification D 1655 – latest issue for Aviation Turbine Fuels ” Jet A-1″ Readily available
AVIATION GASOLINE 100LL
a. British ministry of defense standard DEF STAN 91-90 latest issue Available on prior notice in two hundred liter drums