GET SUPPORT
+94 117 296 100
+94 117 296 100
இலங்கைப் பெற்றோலியப் கூட்டுத்தாபனம் 1961 இன் 28 ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்டு பெற்றோலியப் உற்பத்திகளை இறக்குமதி செய்து நாடு பூராகவும் விநியோகித்து சந்தைப்படுத்துவதற்கு காலடி எடுத்து வைத்தது. சபுகஸ்கந்தையில் தற்போது காணப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்புச் சாலையானது நாளொன்றுக்கு 38000 பீப்பாய் (நாளொன்றுக்கு 5200 மெ.தொ) ஈரான் மென் மசகு எண்ணெய்யினை செயன்முறைப்படுத்துவதற்கு 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது.
மசகு வடித்தல் கொள்ளளவு நாளொன்றுக்கு 5200 மெ.தொ ஆகவிருந்த போதிலும் இவ் அலகு நாளொன்றுக்கு 5800 மெ. தொ மசகு எண்ணெய்யினை செயன் முறைப்படுத்தக் கூடியதாகவிருந்தது. பொறித் தொகுதியினால் வேண்டப்பட்ட உற்பத்தி விபர தேவைப்பாடுகளை நிறைவு செய்கின்ற அப்பர் ஸகும், அரேபியன் லைட் போன்ற ஈரானிய மென் மசகு எண்ணெய்யினை ஒத்த மசகு எண்ணெய் வகைகள் செயன் முறைப்படுத்தப்படுகின்றன.
திரவப் பெற்றோலிய வாயு (LPG) உற்பத்தி 1971 இல் ஆரம்பித்ததுடன் படிக எண்ணெய் பிரிவு, திரவப் பெற்றோலிய வாயுவினை செயன் முறைப்படுத்துவதற்கென மாற்றிமைக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற வசதிகளைப் பயன்படுத்தி விசேட கொதிநிலை கரைசல் (SBPS) உற்பத்தி 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தொழிற்பாட்டினை நாளொன்று 50,000 பீப்பாய் (நாளொன்று 6,900 மெ.தொ) ஆக சுத்திகரிப்பு கொள்வினை அதிகரிப்பதற்கு மசகு எண்ணெய் வடிசாலை அலகு மீளமைக்கப்பட்டது. விமான எரிபொருள் செயன் முறைப்படுத்துவதற்காக புதிய மண்ணெண்ணெய் மெரொக்ஸ் அலகொன்று நிறுவப்பட்டு 1981 இல் செயற்பட ஆரம்பித்ததுடன் அதிக சக்தி நுகருகின்ற மண்ணெண்ணெய் கூட்டுச்சேர்த்தி அதன் பின்னர் செயற்படவில்லை. மிரி லைற் போன்ற தூர கிழக்கு மசகு எண்ணெய் வகைகளை செயன்முறைப்படுத்துவதற்கு மசகு எண்ணெய் வடிசாலை சீரமைக்கப்பட்டதுடன் படிக எண்ணெய் கூட்டு சேர்த்தல் கொள்ளளவு, 1992 இல் நாளொன்றுக்கு 1100 மெ.தொ ஆக அதிகரிக்கப்பட்டது. பெற்றோலுக்கு அதிகரித்து வருகின்ற கேள்வியினை நிறைவுசெய்வதற்கும் பெற்றோலில் உள்ள ஈயத்தினை அகற்றுவதற்க்கும் தளமேடை அலகு நாளொன்றுக்கு 650 மெ.தொ ஆக அதன் கொள்ளளவினை அதிகரிப்பதற்கும் 1999 இல் சீரமைக்கப்பட்டது. டீசலினை செயன்முறைப்படுத்துவதற்காக அப்போது காணப்பட்ட கூட்டுச்சேர்த்தி சீரமைக்கப்பட்டது. டீசலில் காணப்படும் 0.3 % கந்தக விவரக் கூறுகளுக்கு இணங்க கூடியவாறு அப்போது கிடைக்கப் பெற்ற வாயு எண்ணெய் கூட்டுத்சேர்த்தி 2003 இல் புனரமைக்கப்பட்டது.
இதற்கு மேலதிமாக, சுத்திகரிப்புச்சாலை தொழிற்பாட்டினை சத்தி வினைத்திறன்மிக்கதாக ஆக்குவதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சக்தி பாதுகாப்பு கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
பொறித்தொகுதி
தொழிற்பாட்டிற்கு தேவையான மின்சாரம், நீர், ஆவி, கருவிக் காற்று போன்ற பயன்பாட்டு சேவை பிரிவுகளையும் சுத்திகரிப்புச்சாலை கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக,
மசகு எண்ணெய், ஆக்கம் பெற்ற மற்றும் இடைநிலை உற்பத்திகளுக்காக சுத்திகரிப்புச்சாலையினுள் 65 தாங்கிகள் அமையப் பெற்றுள்ளதுடன் ஒருகொடவத்தை தாங்கிப் பண்ணையில் நான்கு எண்ணெய்த் தாங்கிகள் காணப்படுகின்றன.
100% இலங்கை ஊமியர்களுடன் செயற்படுகின்றது.
1100 அதிகமான குடிமக்களுக்கு நேரடி தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றது.
இ.பெ.கூ இன் மொத்த விற்பனைத் தொகுதியின் 30%-35% ஐ பூர்த்தி செய்கின்றது.
வெளிநாட்டு நாணய வெளிப்பாய்சசல்களின் சேமிப்பு
தொடர்ச்சியாக 51 வருட செயற்பாடுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
சுத்திகரிக்கப்பு நிலைய பயிற்சிக்கு வெளிநாடுக- ளால் வழங்கப்பட்ட உயர் அங்கீகாரம்
100% இலங்கை ஊமியர்களுடன் செயற்படுகின்றது.
1100 அதிகமான குடிமக்களுக்கு நேரடி தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்றது.
இ.பெ.கூ இன் மொத்த விற்பனைத் தொகுதியின் 30%-35% ஐ பூர்த்தி செய்கின்றது.
வெளிநாட்டு நாணய வெளிப்பாய்சசல்களின் சேமிப்பு
தொடர்ச்சியாக 51 வருட செயற்பாடுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
சுத்திகரிக்கப்பு நிலைய பயிற்சிக்கு வெளிநாடுக- ளால் வழங்கப்பட்ட உயர் அங்கீகாரம்
அலகு | கொள்ளளவு (தொழிற்பாட்டு நாளொன்றுக்கு மெ.தொ) |
---|---|
மசகு எண்ணெய் வடிசாலை | 5200 |
படிக எண்ணெய்கூட்டுச் சேர்த்தி | 940 |
தளமேடை | 285 |
வாயு எண்ணெய் கூட்டுத்தொகுதி | 450 |
விஸ் பிரேக்கர் | 2000 |
மெரொக்ஸ் அலகு | 70 |
வெற்றிட அலகு | 950 |
தார் அலகு | 350 |