இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் பிரதான குறிக்கோள்கள் பின்வருமாறு:
“பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், விற்பனையாளர் மற்றும் விநியோகத்தர் ஒருவராக தொழில் நடதத்துதல். பெற்றோலியத்தினை அகழ்தல், உற்பத்தி செய்தல் மற்றும் சுத்திகரித்தல் போன்றவற்றுக்கான கண்டறிதல் ஆய்வுத் தொழிற்பாட்டினை நடாத்துதல் அத்துடன் குறிக்கோள்களை அடையும் பொருட்டு இடைநேர்விளைவான அல்லது ஆக்கபூர்மான ஏதேனும் அத்தகைய தொழிற்பாட்டினை நடாத்துதல்”.